ப்ரூக்லினில் தமிழ்

ஸெப்டம்பர் மாதத்தில் துடங்கி சுமார் ஏப்ரில் மாதம் வரை நீடிக்கும் இங்கு பனிக்காலம்.

மதுரையின் வெப்பத்தில், முதலில் கருப்புவெள்ளையிலும் பின்னர் கலரிலும், தொலைக்காட்சியில் மட்டும் கண்ட நிகழ்வு பனி. எப்பொழுதாவது ஊட்டீ, கோடை போனால், வாயிலிருந்து புகை வரச்செய்து விளையாடியது பல மணிக்கூருகள். திரைப்படங்களின் மூடுபனி செயற்கை என்று புரிவதற்கு முன்னே குளிரும் நடுக்கமும் காதலின் அடிப்படை அணிகலன்கள் என்று மனதில் உருவாக்கப்பட்டது.

பனி என்றால் வேலைக்காரன் திரைப்படத்தில் அமலா என்றால் இளையராஜாவின் வா..வா..வா..வா..கண்ணா வா… என்று மனோ வின் கனீர் குரளில் போய் நிற்கும் சிந்தனைகள். அதே சாமானிய மனப்பாதை. எவனோ ஒருவனுடைய வணிகமாயை என் பல வருட கற்பனை. எவ்வளவு அனுபவங்கள் குவிந்தாலும் இப்படியும் ஒரு நிரந்திர அடையாளம் எங்கேயோ மனதில் எதிரொலிப்பதுபொல்.  கூடியபடியே இதையெல்லாம் நானே கட்டமைத்தது போலவும் உருத்தும்.

பனிக்காலத்தில் வீட்டை விட்டு வெளியே போகவேண்டுமென்றால் திட்டமிட்டுத்தான் போகவேண்டும். உடை, இடம், வழி, அனைத்தும் முன்கூராகக் கருதித்தான் செல்வேன்.

ஆனால், வசந்தகாலத்தில் அப்படி அல்ல. உடைகள் கைக்கு வருபவை. திசை, தோன்றியது.

தமிழும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

பருவங்களை போல மாற்றம் அளிக்கும் இயல்பைக் கொண்டது.


ஊருலயே தமிழ ரசிச்சு பேசுரவங்க ரொம்ப கம்மி. அது நம்ம பஸ்டாண்டு பக்கத்துல நிக்குர வேப்பமரம் மாதிரி. இருக்குர வரெக்கும் வர்ரவன் போரவன் எல்லாம் யூரின் அடிக்க ஒரு முக்காடு அது. ஆனா வெளியூர்லேந்து எவனாவது வந்தா ஒடனே வேப்ப்ங்கொட்ட டயபட்டீஸ்க்கு நல்லதுன்னு பீத்திக்கிரது. அதேமாதிரி, இருக்குர பொண்ணுங்களயெல்லாம் திட்டவேண்டியது தமிழ்ல, அப்றொமா சங்கத்தமிழ்னு ஹிந்திக்காரன்ட போய் வம்பிழுக்கவேண்டியது.

அப்பப்போ தொனும், எங்கயோ நாலு பேரு வளத்த தமிழுக்கு, இங்க இவனுங்க என்னடா இவ்லோ ஒரவு கொண்டாடுரானுங்களேன்னு. அமேரிக்கா வந்ததும் கார வாங்கி 30 மைல் ஓட்டிட்டு போய் சாப்டுவாங்க. கேட்டா “மச்சான்.. என்னதான் சொல்லு.. நம்மூரு சாப்பாட்டுக்கு தனி ருசி டா”ன்னு உருகுவாங்க. இந்த நாட்டுக்காரன் என்ன சாப்டுரான், எதுக்கு சாப்டுரான், அத மதிச்சு அதயும் ட்ரை பன்னிப்பாப்போமேன்னெல்லாம் இல்ல. “என்ன எழவுயா சாப்டுரான். தாங்கல”… அதோட விட்டா பறவால.. “மனுசன் சாப்புடுவானா இத” ன்னு அவன மட்டம் தட்டுரது!

படம் பாக்குரதுலயும் அப்படித்தான்.

இருக்குரதுலயே கன்றாவியான படமா இருக்கும்.. நம்ம விஜய் இல்ல அஜித் நடிக்காம நடிச்சிருப்பாங்க. ரெண்டு ஐட்டம் நம்பர், நாலு ஃபைட்டு, “டயலாகாவது, மயிறாவது”ன்னு வாயசைக்குர ஒரு வெளுத்துப்போன ஹீரோயின்னு.. அத பாத்து தமிழண்டா ன்னு ஸீன் பொடவேண்டியது…

ஊர இந்த படமெல்லாம் எப்டி பாதிக்குது, என்ன கருத்து சொல்ராங்க ன்னெல்லாம் ஒன்னும் கண்டுக்குரதில்ல.. காசு குடுத்து, நம்மல மதிக்காட்டியும் பரவாயில்ல, ஏதோ புரிஜ்சா செரி ன்னு பாக்கவேண்டியது.

கொஜ்சம் யோசிச்சு பாத்தாவே தெரிஜ்சிரும். மேடைல பேசுர தமிழ் வெறே, வாழ்க்கைல பேசுர தமிழ் வேறேன்னு… ரெண்டுக்கும் ரொம்ப அகலம். கருத்தும் அப்டி தான். தீவாலி அன்னிக்கு சாலமன் பாப்பைய்யா நடத்துர பட்டிமன்றம்ல பேசுர மாதிரி, நல்ல தூய தமிழ்ல கொஜ்சம், பச்ச தமிழ்ல கொஜ்சம் கலந்து உருட்டி நெரயா பேரு பேசி சுத்துராங்க.

தமிழ் எல்லாம் வளக்குரது செரி தம்பி, தமிழன எப்பொ வளக்க போரீங்க ன்னு கேட்டா கல்லால அடிக்கவராங்க.

தமிழ்நாலயே அடிவாங்குரதுனால தமிழ் பற்று ன்னு தப்புக்கணக்கு பொடுர தாத்தா பாட்டிங்களோட பேர பேத்திங்கள பாத்தாலே போதும். நல்லா அமேரிக்கனுக்கு அமேரிக்கனா திரியுவாங்க. தமிழ் ஒரு அடையாளம் எல்லாம் சரிதான். ஆனா அத விட்டா, சிமெண்ட்ல விழுந்த மீன் மாதிரி எல்லாம் துடிக்கிரது ரொம்ப டூ மச்.

இருக்காங்க… நல்லா தமிழயும் வளத்து, கரெக்டா கருத்தும் சொல்லி, சமூகமும் முன்னேரனும்னு நெனக்கிரவங்க இருக்காங்க. இல்லன்னு சொல்லல.  ஆனா நான் பாக்குர முக்காவாசி பேரு இங்க அப்டி எல்லாம் இல்ல.

வெளியூர்ல பேசுர சமத்துவ பாலிடிக்ஸ் எல்லாம் நம்மூரு போய் சேந்ததும் ஒடனே மறந்திரும். அது மட்டும் இல்ல, வெளியூர் போனதுனால, தமிழ் தன்மை கொரஜ்சுருச்சோன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல? அதுக்காகவே ரோட்டுல வேப்பங்கொம்ப வெச்சி ஒரு ஸெல்ஃபி எடுத்து, அப்ரொம் தனியா போய் கோல்கேட்ல பல்லவெலக்குர கும்பல் தான் ஜாஸ்தி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Blog at WordPress.com.

Up ↑

Rashmika's Ramblings

A confused South African Indian musing about life.

A Russian Affair

my love affair with Russian literature

Byron's muse

Pandora's Box for Art Lovers and Beauty Seekers

Blessed with a Star on the Forehead

As I navigate through this life ...

amuse-douche

Please read the offer document carefully before investing.

%d bloggers like this: