தமிழில் ஒரு தொகுப்பு

ஒரு முயற்சி.

தமிழில் எழுத ஒரு முயற்சி.

இது வரை ஆங்கிலத்தில் எழுதிவந்த எனக்கு இது ஒரு புதிய அனுபவமே. எளிதாக வந்துச்சேரும் வார்த்தைகள் புதிதாகத்தோற்றமளிக்கின்றன. சிந்தனைகள் முந்துகின்றன. மொழியாக்கம் பெருமளவில் பின்னடைகின்றது. ஆங்கிலத்தில் இயலும்பொழுது வரையரைகள் காணாத விரல் முனைகளின் எழுத்துத்துடிப்பு, இன்று சிருபிள்ளை நாக்கை நீட்டிக்கூட்டெழுத்து பயிலும்போல் தடுமாறுகிறது. அகராதிகள் புரட்டாமல் எழுதவேண்டும் என்றொரு பிடிவாதமும்கூட. பல ஆண்டுகள் விரும்பிப்படித்த மொழியை இவ்வாறு பயன்படுத்தாமல் சிதலடையச்செய்த நிலையை எண்ணி ஒரு சிறு வருத்தம் நெஞ்சுக்குள் எழுகிறது.

கடைசியாக தமிழில் எழுதியது 1996-இல். உட்பொருள் காணாமல் மதிப்பெண்களையே  நாடிச்செல்லும் பள்ளிக்கல்வியின் கொடிய ஸ்பரிஸங்களிலூடே என்னுடன் தப்பிவந்த பாடமொழி தமிழ்.

சிறிதளவும் சிணுங்காமல் என்னுடன் பயணித்து வந்தது தமிழ். பிழைப்பதற்க்கு உயற்கல்வி படிக்கவும், சந்தர்ப்பத்தேவையில் சமூகத்தின் ஏணிப்படியேருவதற்கும் ஆங்கிலம்  நாடினேன். வெள்ளைத்தோலின் பாப் கலாச்சரம் அவனுடயதேயென தெரியவந்ததும் தமிழ்த்திரைப்படங்களை உயர்த்திப்பிடித்ததேன்.

மூன்றாவதாக மலையாளமும்.

முன்னெச்செரிக்கையின்றித்தட்டிக்கேட்டால் எம்மொழியில் சிந்தனைகள் வடிவமைக்கப்படுமென்று ஊகிப்பது கடினமே. ஆயினும், மறந்ததாகக்கருதிய எழுத்துக்கள் வருடங்களுக்குப்பிறகு  மறையிடங்களிலிருந்து மெல்ல மெல்லத் தோன்றுவது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.

2 thoughts on “தமிழில் ஒரு தொகுப்பு

Add yours

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Blog at WordPress.com.

Up ↑

Rashmika's Ramblings

A confused South African Indian musing about life.

A Russian Affair

my love affair with Russian literature

Byron's muse

Pandora's Box for Art Lovers and Beauty Seekers

Blessed with a Star on the Forehead

As I navigate through this life ...

amuse-douche

Please read the offer document carefully before investing.

%d bloggers like this: